மட்டக்களப்பு-கிண்ணையடி விஸ்ணு ஆலயத்தில் திருப்பாவை பூஜை
மட்டக்களப்பு மாவட்டத்தில், பழமையான கிராமமான கிண்ணையடி கிராமத்தில் அமையப்பெற்ற விஸ்ணு ஆலயத்தில், தமிழுக்கு மார்கழி முதலாம் திகதியில் இருந்து மார்கழி 30ம் திகதி தைப்பொங்கலுக்கு முதல் நாள்வரை இடம்பெறும் ஆண்டாள் அருளிய திருப்பாவை பூசைகள் இடம்பெற்று வந்தது.
திருப்பாவை நிகழ்வு, இன்று புதன்கிழமை அதிகாலை, கிண்ணையடி மகா விஸ்ணு ஆலயத்தில் மகாவிஸ்ணு ஆண்டாள் ஈஸ்வரிக்கு விசேட பூசைகள் இடம்பெற்று, காலையில் சூரிய உதயத்துக்கு முன் சமுர்த்திர தீர்த்த உற்சவத்துடன் நிறைவு பெற்றது .


