
அரசாங்கம் நாட்டை சீரழிக்கிறது என்பதை ட்ரம்ப்பிடம் நேரில் சொல்ல போகிறேன் – வலவாஹெங்குணவெவே தம்மரதன தேரர்
அரசாங்கத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள், குறிப்பாக கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் விஹாராதிபதி வலவாஹெங்குணவெவே தம்மரதன தேரர் கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
அத்துடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்து, இலங்கை அரசாங்கம் நாட்டை எவ்வாறு சீரழிக்கிறது என்பதை நேரில் விளக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் தமக்கு தெரிந்த மாணவர் ஒருவர் ட்ரம்ப் குடும்பத்துடன் கொண்டுள்ள நெருக்கமான தொடர்பைப் பயன்படுத்தி, ஏற்கனவே இலங்கைக்கு விதிக்கப்பட்டிருந்த அமெரிக்க வரி ஒன்றைக் குறைக்க உதவியதாகத் தேரர் ஒரு தகவலை வெளியிட்டுள்ளார்.
