
ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணிக்கு பேரிடி
தென்னாப்பிரிக்காவின் SA20 கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகளிலிருந்து ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் (Joburg Super Kings) அணித்தலைவர் டு பிளெசிஸ் (Faf du Plessis) விலகியுள்ளார்.
காயம் காரணமாக அவர் குறித்த தொடரிலிருந்து விலகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கடந்த ஜனவரி 10ஆம் திகதி MI கேப் டவுன் அணிக்கு எதிரான போட்டியின் போது, டு பிளெசிஸின் வலது கைப் பெருவிரலில் காயம் ஏற்பட்டுள்ளது.
இந்த காயத்தை குணப்படுத்த அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளதால், அவர் எஞ்சிய போட்டிகளில் விளையாட மாட்டார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
41 வயதான டு பிளெசிஸ் இந்த தொடரில் இதுவரை 5 இன்னிங்ஸ்களில் விளையாடி 135 ஓட்டங்களைக் குவித்துள்ளார்.
தற்போது புள்ளிப்பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ள JSK அணிக்கு இன்னும் 3 லீக் போட்டிகள் எஞ்சியுள்ளன.
டு பிளெசிஸின் இல்லாத நிலையில், எஞ்சிய போட்டிகளில் டொனோவன் ஃபெரைரா (Donovan Ferreira) அணியை வழிநடத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
