
அதிர்ச்சி அளித்த விபத்து : நால்வர் பலி
முல்லைத்தீவு – பரந்தன் பிரதான வீதியிலுள்ள முரசுமோட்டைப் பகுதியில், பேருந்தும் காரும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் நான்கு பேர் உயிரிழந்ததாகவும், ஒருவர் காயமடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஏ-35 வீதியில் பயணித்த காரும் பயணிகள் பேருந்தும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காரில் இருந்த நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
ஒரு பயணி காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பெihலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

