
திருகோணமலையில் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு
-கிண்ணியா நிருபர்-
கடந்த மாதம் நாட்டில் ஏற்பட்ட “தித்வா” புயல் காரணமாக பாதிக்கப்பட்ட திருகோணமலை மாவட்டத்தில் கல்வி கற்கும் தெரிவு செய்யப்பட்ட சுமார் 100 மாணவர்களுக்கு crest foundation ஊடாக இலவச கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கடந்த சனிக்கிழமை திருகோணமலை மாநகர சபை மண்டபத்தில் நடைபெற்றது.
குறித்த நிகழ்வானது அகில இலங்கை வாலிபர் முஸ்லீம் பேரவையின் (ACYMMA) திருகோணமலை மாவட்ட பணிப்பாளர் மு.முக்தார் தலைமையில் மாவட்ட கிளைகளின் ஒத்துழைப்புடன் நடைபெற்றது.
விஷேடமாக இவ் நிகழ்வின் அதிதிகளாக புற்றுநோய் விஷேட நிபுணர் வைத்தியர் கில்மி,
கிழக்கு மாகாண சமூக சேவைகள் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட சமூக சேவைகள் உத்தியோகத்தர் ஜாபீர் மற்றும் தென்கிழக்கு பல்கலைக்கழக பேராசிரியர் அஷ்ரப் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
