
நான்கு குழந்தைகளின் தாய் விபரீத முடிவு
-மஸ்கெலியா நிருபர்-
மஸ்கெலியா பொலிஸ் பிரிவில் உள்ள தோத்தல்ல தனியார் தோட்டத்தில் நான்கு குழந்தைகளின் தாய் தனக்கு தானே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் இன்று திங்கட்கிழமை காலை இடம் பெற்றுள்ளது.
குறித்த பெண் தோதல்ல தோட்டத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்ற பின்னர் நாளாந்த வேலை அடிப்படையில் பணிபுரிந்து வந்த (வயது 52) பெண்ணே இவ்வாறு தூக்கிட்டு கொண்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், சம்பவ இடத்திற்கு ஹட்டன் நீதி மன்ற நீதிவான் நேரில் வந்து பார்வை இட்ட பின்னர் உடலம் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்திய சாலைக்கு கொண்டு செல்ல பட்டு அங்கு சட்ட வைத்திய அதிகாரி முன் நிலையில் உடட் கூற்று பரிசோதனை மேற்கொள்ள உள்ளதாக மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.
இது குறித்து மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
