
மோட்டார் சைக்கிள் – லொறி மோதி விபத்து
புத்தளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டவில்லுவ வீதியில் 06ஆவது மைல் பகுதியிலிருந்து அட்டவில்லுவ நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிள், எதிர் திசையில் வந்த லொரியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தின்போது மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்றவர் பலத்த காயமடைந்து புத்தளம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்தவர் கதவல, அட்டவில்லுவ பகுதியைச் சேர்ந்த 30 வயதுடையவர் எனத் தெரியவந்துள்ளது.
சடலம் புத்தளம் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தினை அடுத்து லொறி சாரதி வாகனத்தை அவ்விடத்திலேயே கைவிட்டு தப்பிச் சென்றுள்ளார். அவரைக் கைது செய்ய புத்தளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
