சம்மாந்துறையில் நவீன மயப்படுத்தப்படவுள்ள சிறுவர் பூங்கா -மாஹிர் நேரில் ஆய்வு

-அம்பாறை நிருபர்-

சம்மாந்துறை பிரதேசத்தில் அமைந்துள்ள சிறுவர் பூங்காவை புனரமைத்து, நவீன வசதிகளுடன் மக்கள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் திட்டத்தின் கீழ், பிரதேச சபை தவிசாளர் மாஹிர் இன்று ஞாயிற்றுக்கிழமை பூங்காவிற்கு நேரடி விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.

இந்த விஜயத்தின் போது, பூங்காவின் தற்போதைய நிலைமைகளை அவதானித்த தவிசாளர், அங்கு வருகை தந்திருந்த சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தார். பூங்காவில் ஏற்படுத்தப்பட வேண்டிய மாற்றங்கள் மற்றும் விளையாட்டு உபகரணங்களின் தரம் குறித்து பயனாளர்களின் கருத்துக்கள் இதன்போது விரிவாகப் பெறப்பட்டன.

இத்திட்டத்தின் மூலம் சம்மாந்துறை பிரதேச சிறுவர்களுக்கு ஒரு பாதுகாப்பான மற்றும் கவர்ச்சிகரமான விளையாட்டுச் சூழல் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.