இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு
-மஸ்கெலியா நிருபர்-
இயற்கை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு, இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள, பசறை யூரி தமிழ் வித்தியாலய மாணவர்களுக்கு, கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
விவசாய தோட்டத் தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் ஆர்.எம்.கிருஸ்ணா விடுத்த வேண்டுகோளுக்கு அமைய, சுவிட்சர்லாந்து பேரிடர் பணி நிறுவனத்தின் அனுசரணையுடன், யாழ்ப்பாணம் ஸ்ரீ செல்வச்சந்நிதியான் ஸ்தாபகத் தலைவர் எஸ்.மோகனதாஸ் சுவாமி உபகரணங்களை கையளித்தார்.


