
மன்னாரில் 21 வயது இளம் குடும்ப பெண்ணை காணவில்லை : பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு!
-மன்னார் நிருபர்-
மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள. சௌத்பார் பகுதியில் வசித்து வந்த. இளம் குடும்பப் பெண்ணை காணவில்லை என, குறித்த பெண்ணின் உறவினர்களால் மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மன்னார் சௌத்பார் பகுதியில் வசித்து வந்த, அ.கான்சியூஸ் சகாய கீர்த்தனா (வயது 21) எனும் திருமணமான இளம் குடும்பப் பெண்ணே இவ்வாறு காணாமல் பொயுள்ளார்.
குறித்த பெண்ணை, அவரது கணவர் நேற்றைய தினம் சனிக்கிழமை, மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு பற்சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கு வைத்தியசாலையில் மனைவியை விட்டு விட்டு வீடு திரும்பிய கணவன், சிறிது நேரத்தின் பின் மனைவியை அழைத்து வர மீண்டும் வைத்திசாலைக்கு சென்றுள்ளார்.
ஆனால் வைத்தியசாலையில் அவரது மனைவி இருக்கவில்லை, மனைவி குறித்து அவர் வைத்தியசாலையில் விசாரித்த போது, எவ்வித தகவலும் அவருக்கு கிடைக்கவில்லை.
அதன்பின்னர் காணாமல் போன பெண்ணனின் கணவர் மற்றும் உறவினர்கள், மன்னார் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
எனினும், குறித்த குடும்ப பெண், மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் இருந்து, முச்சக்கர வண்டி ஊடாக மன்னார் பேருந்து நிலையத்திற்கு சென்று, அங்கிருந்து வவனியா பேருந்தில் ஏறி பயணித்துள்ளமை தமக்கு தெரியவந்துள்ளதாக, உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.
பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
