யாழில் புகையிரதத்துடன் மோதி படுகாயமடைந்த இளைஞன் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் – அரியாலை 13ஆம் கட்டை பகுதியில், நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த இளைஞர், சிகிச்சை பலனின்றி, இன்று ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார்.

முத்தமிழ் வீதி, கொட்டடி பகுதியைச் சேர்ந்த சிவராஜா சிவலக்சன் (வயது 23) என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யாழில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த கடுகதி புகையிரதத்துடன், மோட்டார் சைக்கிள் மோதி விபத்து இடம்பெற்றது.

விபத்தில் காயமடைந்த இளைஞன், யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.