-யாழ் நிருபர்-
யாழ்ப்பாணம் – காரைநகர் சின்னாலடி வீதியை, முன்னாள் இந்து கலாச்சார அமைச்சரின் நினைவாக மகேஸ்வரன் வீதியாக மாற்றக்கோரி, கடந்த 2018 ஆம் ஆண்டு, காரைநகர் பிரதேச சபையின் முன்னாள் உப தவிசாளர் க.பாலச்சந்திரனால் சபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இது 2022 டிசம்பர் மாதம் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போதைய காரைநகர் பிரதேச சபையின் உறுப்பினர் செந்தூரனின் வேண்டுகோளுக்கிணங்க, அமரர் மகேஸ்வரனின் பிறந்த தினமான நேற்று சனிக்கிழமை, பிரதேச சபை தவிசாளர் திரு.கிருஸ்ணன் கோவிந்தராஜ், உபதவிசாளர் மற்றும் உறுப்பினர்கள், பொதுமக்களின் பங்குபற்றுதலுடன், வீதிக்கான பெயர்ப்பலகை திரைநீக்கம் செய்து திறந்து வைக்கப்பட்டது.

