
இயக்குநர் பாக்யராஜ் திரையுலகிற்கு வந்து 50 ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு நடைபெற்ற விழாவில், நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.
பாக்யராஜின் திறமைக்குக் கிடைக்க வேண்டிய மதிப்பு, மரியாதை மற்றும் ஊதியம் ஆகியவை அவருக்கு இன்னும் முழுமையாகக் கிடைக்கவில்லை என ரஜினிகாந்த் குறிப்பிட்டார்.
பாக்யராஜ் யாரிடமும் முகஸ்துதி செய்ய மாட்டார் என்றும், மனதில் பட்டதை உண்மையாகவும் நியாயமாகவும் பேசுபவர் என்றும் அவர் பாராட்டினார்.
“என்னுடைய திரையுலக வாரிசு பாக்யராஜ்” என்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆரால் அறிவிக்கப்பட்டவர் அவர்.
அண்ணாவின் இதயத்தில் எம்.ஜி.ஆர் இடம்பிடித்தது போல, எம்.ஜி.ஆரின் இதயத்தில் ‘இதயக்கனியாக’ பாக்யராஜ் இடம்பிடித்தார்.
எம்.ஜி.ஆர் நேரில் வந்து திருமணத்தை நடத்தி வைக்கும் அளவிற்கு அவர் மீது மிகுந்த அன்பு கொண்டிருந்தார் என்பதையும் ரஜினிகாந்த் நினைவு கூர்ந்தார்.
