லிட்ரோ எரிவாயு விலையில் மாற்றமில்லை

ஜனவரி மாதத்தில் லிட்ரோ எரிவாயு விலைகளில் எவ்வித மாற்றமும் இல்லையென நிறுவனம் அறிவித்துள்ளது.

உலக சந்தையில் எரிவாயுவின் விலையில் சற்றே அதிகரிப்பு ஏற்பட்டிருந்த போதிலும், நுகர்வோரின் நலன் கருதி விலையை அதிகரிக்காமல் இருக்கத் தீர்மானித்ததாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

12.5 கிலோ கிராம் எரிவாயுவின் விலை 3,690ரூபாய்க்கும் 05 கிலோ கிராம் எரிவாயுவின் விலை
1,482ரூபாய்க்கும் 02.3 கிலோ கிராம் எரிவாயுவின் விலை 694ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படும் லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது .