ஜனநாயகன் வெளியீடு தள்ளிப்போகிறதா? ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் மற்றும் எச்.வினோத் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ஜனநாயகன்.

இத்திரைப்படம் ஜனவரி 9 வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இருப்பினும் திரைப்படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்குவதில் தணிக்கை வாரியம் தாமதம் செய்ததால், படக்குழு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.

இதன்படி இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தணிக்கை சான்றிதழ் தொடர்பான தீர்ப்பை ஜனவரி 9 அன்று வழங்குவதாக அறிவித்துள்ளது.

திரைப்படம் வெளியாக வேண்டிய அதே நாளில் (9) தீர்ப்பு வருவதால், திட்டமிட்டபடி திரைப்படத்தை வெளியிடுவதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

தீர்ப்பு வெளியான பின், திரைப்படம் எதிர்வரும் ஜனவரி 10 வெளியாக வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.