
சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக ஸ்தம்பிதம்
ஹம்பாந்தோட்டை மோட்டார் போக்குவரத்து திணைக்கள அலுவலகத்தில் சாரதி அனுமதிப்பத்திர விநியோகம் தற்காலிகமாக ஸ்தம்பித்துள்ளது.
ஹம்பாந்தோட்டை நிர்வாக வளாகத்தில் ஏற்பட்டுள்ள தொலைபேசி மற்றும் இணைய இணைப்பு கோளாறு காரணமாக இந்தநிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தற்போத தொலைபேசி இணைப்புகளைச் சீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரமைப்பு பணிகள் முடிந்தவுடன் நிகழ்நிலை (Online) மூலமான விநியோக சேவைகள் உடனடியாகத் தொடங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் சேவைகள் வழமைக்குத் திரும்பும் வரை பொதுமக்கள் பொறுமை காக்குமாறு மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
