யாழ்.கடலில் கைதான இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்!

-யாழ் நிருபர்-

இலங்கை கடற்பரப்பான நெடுந்தீவு மற்றும் காரைநகர் கடற்பரப்புகளில் எல்லைதாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்ட 23 மீனவர்களையும் எதிர்வரும் 21 ஆம் திகதிவரை விளக்கறியில் வைக்குமாறு ஊர்காவற்றுறை நீதிமன்ற நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

டிசம்பர் 27ஆம் திகதி, ஜனவரி 2 மற்றும் ஜனவரி 3 ஆகிய திகதிகளில் கைதான மீனவர்களுக்கே இவ்வாறு விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் ஊர்காவற்றுறை நீதிமன்றில் இவர்கள் ஆஜர்படுத்தப்பட்டனர்.

வழக்கினை யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத்துறை அதிகாரிகள் நெறிப்படுத்தினார்கள்.