மட்டக்களப்பில் போதைப்பொருள் வாங்க கையிலுள்ள தங்க வளையலை தருமாறு கேட்டு மகளை தாக்கிய தந்தை!
போதை பொருள் வாங்க பணம் தேவைப்படுவதால் 14 வயது சிறுமியான மகளின் கையில் இருந்த தங்க வளையலை கழற்றி தருமாறு தந்தை ஒருவர் தனது மகளை அடித்து துன்புறுத்திய சம்பவம் மட்டக்களப்பில் இடம்பெற்றுள்ளது.
தாக்குதலுக்குள்ளாகிய சிறுமி காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சந்தேகநபரான சிறுமியின் தந்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டு எச்சரிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டள்ளார்.
இச்சம்பவம் காத்தான்குடி பொலிஸ் பிரிவிலுள்ள மாவிலங்குதுறை பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவி;தனர்
குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான நபர் ஒருவர் போதைப்பொருள் வாங்குவதற்கு பணம் இல்லாததால் 14 வயது சிறுமியான அவரது மகளின் கையில் இருந்த 3 பவுண் தங்க வளையலை கழற்றி தருமாறு கேட்டுள்ளார்.
சிறுமி வளையலை கழற்றி கொடுத்துள்ளார் எனினும் குறித்த நபர் தனது மகளை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
காயமடைந்த சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் பொலிஸாரிடம் முறைப்பாடும் அளிக்கப்பட்டது.
இதனையடுத்து குறித்த நபரை பொலிஸார் கைது செய்ய சென்ற போது அவர் பொலிஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நிலையில் பொலிஸார் அவரை கைது செய்தனர்
பின்னர் பாதிக்கப்பட்ட சிறுமி தனது தந்தைக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டாமென பொலிஸாரிடம் கோரியதையடுத்து குறித்த நபரை பொலிஸார் எச்சரிக்கை செய்து விடுவித்துள்ளனர்.
