பிலிப்பைன்ஸில் நில நடுக்கம்

பிலிப்பைன்ஸ் நாட்டின் பாகுலின் கடற்கரைப் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

6.7 மெக்னியூட் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிலிப்பைன்ஸ் நில அதிர்வு ஆய்வு மையம் மற்றும் அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் ஆகியவை இந்த இயற்கை சீற்றத்தின் தீவிரம் மற்றும் ஆழத்தை உறுதிப்படுத்தியுள்ளன.

நில நடுக்கத்தைத் தொடர்ந்து பலமான அதிர்வுகளும் சேதங்களும் ஏற்பட வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்புகள் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.