மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்கான வவுச்சர்ஸ் வழங்கும் நிகழ்வு

 

-சம்மாந்துறை நிருபர்-

அண்மையில் ஏற்பட்ட “டித்வா” புயல் மற்றும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட சம்மாந்துறை பிதேச செயலகப்பிரிவைச் சேர்ந்த 21 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக தலா பதினையாயிரம்(15000) பெறுமதியான வவுச்சர்ஸ் வழங்கும் நிகழ்வு “GAFSO” அமைப்பின் அனுசரணை மற்றும் பங்களிப்புடன் நேற்று செவ்வாய்க்கிழமை பிதேச செயலக கூட்ட மண்டபத்தில் நடைபெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபாவின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சமூக சேவைப்பிரிவின் சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை பிதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் வி.வாசித் அஹமட் கலந்து சிறப்பித்திருந்தார்.

மேலும் இந் நிகழ்வில் சம்மாந்துறை பிதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் ஜே.எம் ஜெமீல், GAFSO அமைப்பின் முகாமைத்துவ பணிப்பாளர் ஏ.ஜே. காமில் இம்டாட்,சமூக சேவை உத்தியோகத்தர் ஏ .அகமட் சபீர், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்களான எம்.ஐ.எம் கரீமா,ஏ.ஜே குறைஸா,பிதேச சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர், வி.விஜயதாஸ், மகளீர் அபிவிருத்தி உத்தியோகத்தர் எம்.பி.நஸ்லா , மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர்கள்,மாணவர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.