இந்திய இராணுவத் தலைமைத் தளபதி இன்று இலங்கை வருகிறார்

இந்திய இராணுவத் தலைமைத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இன்று உத்தியோகபூர்வ விஜயமாக நாட்டுக்கு வருகைத் தருகிறார்.

இந்த விஜயம் நேச நாடுகளுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் முதன்மை நோக்கத்துடன் நடைபெறுவதாக தெரிவிக்கின்றது.

இந்தப் பயணத்தின் போது, ​​இராணுவத் தளபதி, பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பாதுகாப்பு பிரதி அமைச்சர் உள்ளிட்ட சிரேஷ்ட இராணுவத் தலைவர்களுடன் ஜெனரல் உபேந்திர திவேதி கலந்துரையாடவுள்ளார்.

பயிற்சி ஒத்துழைப்பு மற்றும் பிராந்திய பாதுகாப்பு தொடர்பில் இந்த கலந்துரையாடல்கள் கவனம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.