ஜனநாயகன் விவகாரம்: தணிக்கை வாரியத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

 

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கைச் சான்றிதழ் கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாகச் சிக்கலை எதிர்கொண்டுள்ளது.

இது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இதன்படி தணிக்கை வாரியம் பரிந்துரைத்த அனைத்து மாற்றங்களும் செய்யப்பட்ட பின்னரும், மத உணர்வுகளைப் புண்படுத்துவதாகக் கூறி யாரோ அளித்த புகாரின் அடிப்படையில் சான்றிதழ் வழங்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சுமார் 500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ள நிலையில், திரைப்படம் வெளியாகாத சூழலில் யாரோ ஒருவர் அளித்த முறைப்பாடினால் சான்றிதழைத் தாமதப்படுத்துவது முறையற்றது எனத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்தது.

தணிக்கை வாரியத்தின் வாதங்களைக் கேட்ட நீதிபதி, “ஏன் இத்திரைப்படத்தை ஜனவரி 10ஆம் திகதிக்கு வெளியிடக்கூடாது?” எனத் திரைப்படக் குழுவிடம் கேள்வி எழுப்பினார்.

திரைப்படத்திற்கு எதிராகத் தொடரப்பட்ட முறைப்பாடு நாளை  புதன்கிழமை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு தணிக்கை வாரியத்திற்கு உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை நாளை இற்கு ஒத்திவைத்தார்