
காலி நகரில் கடும் மழை: வீதிகள் நீரில் மூழ்கின
காலி பகுதியில் இன்று செவ்வாய்கிழமை பெய்த கடும் மழை காரணமாக நகரின் பல பிரதான வீதிகள் நீரில் மூழ்கியுள்ளன.
காலி காவல்துறை நிலையத்திற்கு அருகிலுள்ள காலி-வக்வெல்ல வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீதியில் வெள்ளம் தேங்கியுள்ளதால், காலி-வக்வெல்ல வீதியூடான வாகனப் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக காலி காவல்துறை தெரிவித்துள்ளது.
காலிப் பகுதியில் தற்போது வரை தொடர்ந்து மழை பெய்து வருவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
