
பாம்புக் கடிக்கு இலக்கான இளைஞன்
கிளிநொச்சியில் பாம்புக் கடிக்கு இலக்காகி இளைஞர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார்.
கல்மடு நகர் பகுதியில் ஆலய வளாகத்தில் சிரமதான பணியில் ஈடுபட்ட சிறிகாந்தன் கிருசிகன் (வயது 23) என்னும் இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இளைஞனை தர்மபுரம் வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்ற பொழுது ஏற்கனவே இறந்துள்ளார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து குறித்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை இராமநாதபுரம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


