
BTS இரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி
உலகப் புகழ்பெற்ற தென் கொரிய இசைக் குழுவான BTS அதன் சமீபத்திய பாடல் தொகுப்பை(Album) மார்ச் 20 ஆம் திகதி வெளியிடும் என்று குழுவின் நிர்வாக நிறுவனமான ‘Big Hit Music’ அறிவித்துள்ளது.
இந்தப் புதிய பாடல் தொகுப்பு வெளியான பின்னர், BTS உறுப்பினர்கள் ஒரு பெரிய உலகச் சுற்றுப்பயணத்தை மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
2022 இல் வெளியிடப்பட்ட “Proof” பாடல் தொகுப்பிற்கு பின்னர் குழுவின் ஏழு உறுப்பினர்களும் வெளியிடும் முதல் வெளியீடு இதுவாகும்.
சமீபத்தில், BTS உறுப்பினர்கள் தங்கள் இராணுவ சேவையில் சேர்ந்ததால் அதன் பொது நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
HYBEக்கு சொந்தமான Big Hit Music ஒரு அறிக்கையில், இந்த புதிய வெளியீடு ரசிகர்களுக்கு ஒரு சிறப்பு அனுபவமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளது.
