
கிழக்கு ஆளுனர் செயலாளர் நியமனம்
-கிண்ணியா நிருபர்-
கிழக்கு மாகாண ஆளுநர் செயலக செயலாளராக பி. வாகேஷன் நேற்று திங்கட்கிழமை திருகோணமலையில் உள்ள ஆளுநர் அலுவலகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
கிழக்கு ஆளுனர் ஜயந்தலால் ரட்ணசேகரவிடமிருந்து நியமனத்தை பெற்றுக்கொண்டார்.
வாகேஷன் முன்னர் நிதி மற்றும் திட்டமிடல் அமைச்சில் பணியாற்றினார்.
