பிரான்ஸ் முதற்பெண்மணி தொடர்பில் பொய்யான தகவல்களை பரப்பிய வழக்கில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு!
பிரான்ஸ் நாட்டின் முதற்பெண்மணி பிரிஜிட் மக்ரோன், ஒரு திருநங்கை என்று பொய்யான தகவல்களை பரப்பிய வழக்கில் 10 பேர் குற்றவாளிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர்.
பிரான்ஸ் நாட்டின் முதற்பெண்மணி பிரிஜிட் மக்ரோன் தரப்பில் தொடரப்பட்ட சைபர் தாக்குதல் வழக்கில், குறித்த 10 பேரும் குற்றவாளிகள் என பாரிஸ் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை தீர்ப்பளித்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
முதற்பெண்மணி பிரிஜிட் மக்ரோன், பிறப்பிலே ஆணாக பிறந்து அதன் பின்னர் பெண்ணாக மாறிய திருநங்கை என, பல கருத்துக்கள் பரவியமை குறிப்பிடத்தக்கது.
