
மன்னார் பாடசாலையின் புதிய அதிபரை வரவேற்ற பாடசாலை சமூகம்
-மன்னார் நிருபர்-
மன்னார் பேசாலை பற்றிமா மத்திய மகாவித்தியால பாடசாலையின் புதிய அதிபராக நியமிக்கப்பட்ட யூட் ஜோசப் ஆனந்தம் குரூஸ் இன்று திங்கட்கிழமை தனது கடமையை பொறுப்பேற்றார்.
புதிய அதிபரை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை பாடசாலையில் இடம் பெற்றது. இதன் போது பேண்ட் இசை வாத்தியத்துடன் பாடசாலையின் புதிய அதிபரான யூட் ஜோசப் ஆனந்தம் குரூஸ் வரவேற்கப்பட்டார்.
இதன் போது பாடசாலையின் மாணவர்கள்,ஆசிரியர்கள்,பழைய மாணவர்கள் மற்றும் பேசாலை மக்கள் இணைந்து புதிய அதிபரை வரவேற்றனர்.



