
அழிவை நோக்கி நகரும் பிரபஞ்சம் – அதிர்ச்சி தகவல்
பிரபஞ்சம் விரிவடைவதற்கு காரணமான ‘கருப்பு ஆற்றல்’ (Dark Energy) எதிர்காலத்தில் வலுவிழக்கக்கூடும் என்றும், அதனால் ஒட்டுமொத்த பிரபஞ்சமும் மீண்டும் ஒரு புள்ளியில் சுருங்கி அழியும் வாய்ப்புள்ளதாகவும் விஞ்ஞானிகள் கணித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தற்போது விரிவடைந்து கொண்டிருக்கும் பிரபஞ்சம், ஒரு கட்டத்தில் தலைகீழாகச் சுருங்கத் தொடங்கி, ஒரு சிறிய புள்ளியில் முடிவடையும் வாய்ப்புள்ளதாக Royal Astronomical Society இதழில் வெளியான புதிய ஆய்வு தெரிவிக்கின்றது.
கருப்பு ஆற்றல் மந்தமடைவதால் பிரபஞ்சம் மீண்டும் சுருங்கி அழிந்துபோகும் இந்த நிகழ்வை விஞ்ஞானிகள் ‘Big Crunch’ என்று அழைக்கின்றனர்.
இருப்பினும், இந்தப் பிரபஞ்ச அழிவு உடனடியாக நிகழாது என்றும், இது நடக்க இன்னும் 19.5 பில்லியன் ஆண்டுகள் ஆகலாம் என்றும் விஞ்ஞானிகள் மதிப்பீடு செய்துள்ளனர்.
