ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிடியாணை உத்தரவு
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று (05) நிதிக்குற்ற விசாரணைப் பிரிவில் ஆஜராக வேண்டும் எனவும், தவறினால் அவரை கைது செய்வதற்கு நீதிமன்ற பிடியாணை பெறப்படும் எனவும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
சதொச நிறுவனத்துக்கு சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்துக்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் , முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவைக் கைது செய்வதற்கான விசாரணைகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
