
தம்பலகாமம் பிரதேச செயலாளரின் சேவையை பாராட்டி கௌரவிப்பு
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலாளர் திருமதி ஜெயகௌரி ஸ்ரீபதிகiகு சேவையை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வொன்று நேற்ற சனிக்கிழமை முள்ளிப்பொத்தானையில் இடம் பெற்றது.
இதனை தம்பலகாமம் கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி ஒன்றியம் (ESDF) ஏற்பாடு செய்திருந்தது.
2014 தொடக்கம் 2025 வரை பிரதேச செயலாளராக அர்ப்பணிப்புடனும் திறமையுடனும் திறம்பட கடமை ஆற்றிய பிரதேச செயலாளர் ஸ்ரீபதிக்கு நன்றியுடனும் மரியாதையுடனும் கௌரவித்து பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
தம்பலகாமம் பிரதேச செயலகப் பிரிவில் பல்லின சமூகத்தை சேர்ந்தவர்கள் வாழும் பிரதேசமாகும். இக் குறித்த காலப்பகுதியில் பிரதேச செயலாளராக திறம்பட கடமையாற்றி மக்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இக் குறித்த கௌரவிப்பு நிகழ்வில் குறித்த அமைப்பின் தலைவர்இ செயலாளர் உள்ளிட்ட பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




