
மட்டு.ஒந்தாச்சிமடம் கடற்கரையில் இந்திய கொடியுடன் கரையொதுங்கிய மர்மப்பொருள்!
மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட ஒந்தாச்சிமடம் கடற்கரையில் இந்திய கொடியுடன் மர்மப்பொருள் ஒன்று இன்று சனிக்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது.
இந்திய தேசிய கொடியுடன் கரையொதுங்கிய மர்மப்பொருள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்திலும் கரையொதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்திய தேசிய கொடியுடன் கரையொதுங்கிய மர்மப்பொருள் விண்கலம் ஒன்றின் பாகமாக இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
