புதிதாக நிர்மாணிக்கப்பட்டு வரும் கட்டடமொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

காலி – அம்பலாங்கொடை பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய கட்டடமொன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

நேற்று வெள்ளிக்கிழமை பிற்பகல் குறித்த சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

உயிரிழந்தவரின் அடையாளம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில் சடலம் பலபிட்டிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.