
2026 டி20 உலகக் கிண்ணம் : தென்னாப்பிரிக்க குழாம் அறிவிப்பு!
இந்தியா மற்றும் இலங்கையில் எதிர்வரும் பெப்ரவரி 07 முதல் மார்ச் 08 வரை நடைபெறவுள்ள 2026 ஐசிசி ஆண்களுக்கான டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடருக்கான 15 பேர் கொண்ட தென்னாப்பிரிக்க குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி அதிரடி துடுப்பாட்ட வீரர் எய்டன் மார்க்ரம் (Aiden Markram) அணியை வழிநடத்தவுள்ளார்.
இந்த அணியில் முதல்முறையாக டி20 உலகக் கிண்ண தொடருக்கு குழாமில் 7 இளம் வீரர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர்.
இதன்படி கோர்பின் போஷ் (Corbin Bosch), டெவால்ட் ப்ரீவிஸ் (Dewald Brevis), டோனி டி ஸோர்ஸி (Tony de Zorzi)
டொனாவன் ஃபெரைரா (Donovan Ferreira), ஜார்ஜ் லிண்டே (George Linde), குவேனா மபாகா (Kwena Maphaka), ஜேசன் ஸ்மித் (Jason Smith) ஆகிய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
விலா எலும்பு காயம் காரணமாக இந்தியாவுக்கு எதிரான அண்மைக்கால வெள்ளைப்பந்து தொடரில் பங்கேற்காத நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் காகிசோ ரபாடா (Kagiso Rabada) மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.
இம்முறை உலகக் கிண்ண தொடரில் தென்னாப்பிரிக்க அணி ‘குழு D’ பிரிவில் இடம்பிடித்துள்ளது.
இந்தப் பிரிவில் ஆப்கானிஸ்தான், கனடா, நியூசிலாந்து மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் (UAE) ஆகிய அணிகள் உள்ளன.
தென்னாப்பிரிக்கா தனது முதல் ஆட்டத்தில் பெப்ரவரி 09 அன்று அஹமதாபாத் நகரில் கனடா அணியை எதிர்கொள்கிறது.
