
இன்றும் அதிகரித்தது தங்கத்தின் விலை
இன்றும் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்தது.
இதன்படி, 24 கரட் தங்க பவுண் ஒன்று 2,000 ரூபாயினால் அதிகரித்துள்ளது.
இதற்கமைய 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 356,000 ஆயிரம் ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
அத்துடன் 22 கரட் தங்கம் பவுண் ஒன்று 329,300 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.
இந்தநிலையில் 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 44,500 ரூபாயாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 41,162 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
