மத்துகம பிரதேச சபை தலைவர் விளக்கமறியலில்

மத்துகம பிரதேச சபையின் செயலாளர் மீது தாக்குதல் நடத்தியமை மற்றும் கடமைக்கு இடையூறு விளைவித்த சம்பவம் தொடர்பில் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த பிரதேச சபையின் தலைவர் கசுன் முணசிங்க விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அவரை எதிர்வரும் 8ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

அத்துடன் சபையின் செயலாளர் இன்று வெள்ளிக்கிழமை கடமைக்கு சமூகமளித்த போது அவரது அலுவலக அறையை சபைத் தலைவர் கையகப்படுத்தியிருந்தமை குறித்தும் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தியின் அதிகாரத்தைக் கொண்ட மத்துகம பிரதேச சபையின் தலைவர் கசுன் முணசிங்க, குறித்த சபையின் செயலாளர் நெலு நிஷாந்தி இத்தகொடவை அச்சுறுத்தி அவரை தாக்கியதாகவும் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது. இதனையடுத்து செயலாளர் மத்துகம வெத்தேவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.