பாடசாலை நேரம் நீடிக்கப்படாது -கல்வி அமைச்சு

நாட்டில் நிலவும் அனர்த்த நிலைமை மற்றும் போக்குவரத்துச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, 2026 ஆம் ஆண்டில் பாடசாலை நேரம் நீடிக்கப்படாது என கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

2026 ஆம் ஆண்டுக்கான பாடசாலை கல்வி நடவடிக்கைகள் தொடர்பாக, கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள அரசு மற்றும் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் ஜனவரி 5 ஆம் திகதி ஆரம்பமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தரம் 5 – 13 வரையான மாணவர்களுக்கு காலை 7.30 முதல் பிற்பகல் 1.30 வரை வழமையான நேர அட்டவனை தொடரும்.

தரம் 6 முதல் 13 வரை நாளொன்றுக்கு 7 பாடவேளைகள் இடம்பெறும் என்பதுடன், ஒரு பாடவேளைக்கு 45 நிமிடங்கள் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2026 இல் தரம் 1 மற்றும் தரம் 6 மாணவர்களுக்குக் கல்வி மறுசீரமைப்புச் செயற்பாடுகள்
நடைமுறைப்படுத்தப்படும் எனவும், தரம் 6ஆம் ஆண்டுக்கான உத்தியோகபூர்வ கல்வி நடவடிக்கைகள் ஜனவரி 21 ஆம் திகதி ஆரம்பமாகும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.