
பாபா வாங்காவின் திகில் கணிப்பு
எதிர்காலத்தைக் கணிப்பதில் உலகப் புகழ்பெற்றவரான பாபா வங்கா, 2026 ஆம் ஆண்டு மனிதகுலத்திற்குப் பெரும் சவால்கள் நிறைந்த ஆண்டாக இருக்கும் என எச்சரித்துள்ளார்.
அவர் முன்கூட்டியே சொல்லியிருந்த பல விடயங்கள் ஏற்கனவே நடந்திருப்பதால், இவருடைய இந்தக் கணிப்பு தற்போது மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
2026 ஆம் ஆண்டு உலகப் பொருளாதாரம் பாரிய சரிவைச் சந்திக்கும் எனவும், குறிப்பாக, நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போட்டிகளால் சர்வதேச சந்தை நிலைகுலையும் என்றும், காகிதப் பணம் மற்றும் டிஜிட்டல் நாணயங்களின் பெறுமதி மிக மோசமாக வீழ்ச்சியடையும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலக நாடுகளுக்கு இடையே நிலவும் முறுகல் நிலைகள் மேலும் தீவிரமடையும் எனவும் 2026 இல் ஒரு பெரும் போர் வெடிக்கக்கூடும் என அவர் எச்சரித்துள்ளார்.
இதுவே ‘மூன்றாம் உலகப் போராக’ மாறக்கூடிய சாத்தியம் இருப்பதாகவும், இதனால் மேற்கத்திய நாடுகள் பெரும் பாதிப்புகளைச் சந்திக்கும் என்றும் அவரது கணிப்புகள் கூறுகின்றன.
காலநிலை மாற்றம் காரணமாக வழமைக்கு மாறான இயற்கைப் பாதிப்புகள் ஏற்படும். பாரிய நிலநடுக்கங்கள், வெள்ளப்பெருக்கு மற்றும் வெப்ப அலைகளின் தாக்கம் 2026 இல் அதிகமாக இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், தொழில்நுட்ப வளர்ச்சியில் செயற்கை நுண்ணறிவின் (AI) ஆதிக்கம் கட்டுக்கடங்காமல் செல்லும் என்றும், இது மனிதர்களின் வேலைவாய்ப்புகள் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் பாரிய சவால்களை உருவாக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
பூமிக்கு வேற்றுகிரகவாசிகள் (Aliens) வரக்கூடும் என்றும் அவர் கணித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஏற்கனவே இந்திரா காந்தியின் மரணம், அமெரிக்க இரட்டைக்கோபுரத் தாக்குதல், சுனாமி போன்றவற்றைச் சரியாகக் கணித்தவர் என்பதால், பாபா வாங்காவின் இந்த 2026 ஆம் ஆண்டுக்கான எச்சரிக்கைகள் உலக அளவில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.
