
மூதூர் சுகாதார அலுவலகத்தில் சத்தியப்பிரமாண நிகழ்வு
மூதூர் சுகாதார அலுவலகத்தில் அரச உத்தியோகத்தர்களின் 2026 ஆம் ஆண்டுக்கான புதிய ஆண்டு சத்தியப்பிரமாண நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றது.
மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் என்.எம். கசாலி அவர்களின் தலைமையில், மூதூர் சுகாதார அலுவலக வளாகத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
நிகழ்வின் ஆரம்பத்தில் தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன், அதனைத் தொடர்ந்து 2026 புதிய ஆண்டுக்கான சத்தியப்பிரமாணம் நடத்தப்பட்டது.
இதன் பின்னர் இரண்டு நிமிட மௌன அஞ்சலி நிகழ்வும், புதிய ஆண்டு வாழ்த்து நிகழ்வும் இடம்பெற்றன. இறுதியில் இனிப்பு பண்டங்கள் பரிமாறப்பட்டன.
புதிய ஆண்டின் முதல்நாள் நிகழ்வாக அமைந்த இச்சத்தியப்பிரமாண நிகழ்வில், மூதூர் சுகாதார அலுவலகத்தின் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
