
வரலாற்று சாதனை படைத்த இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனம்
இலங்கை ஆயுர்வேத கூட்டுத்தாபனம் இந்த ஆண்டு இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வருவாயைப் பதிவு செய்துள்ளது என சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
அதன்படி, இந்த ஆண்டு ஆயுர்வேத கூட்டுத்தாபனம் ரூ. 1,660 மில்லியன் வருவாயைப் பதிவு செய்துள்ளது என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
2025 ஆம் ஆண்டில் இலங்கை ஆயுர்வேத மருந்துக் கூட்டுத்தாபனத்தால் அடையாளம் காணப்பட்ட 7 புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்துவதற்காக நாவின்ன ஆயுர்வேத கூட்டுத்தாபன கேட்போர் கூடத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இவ்வாறு தெரிவித்தார்.
ஆயுர்வேதத் துறை என்பது இந்த நாட்டு மக்களின் நல்வாழ்வுக்காகச் செயல்பட வேண்டிய ஒரு துறையாகும், அதில் அரசாங்கம் முதலீடு செய்ய வேண்டும், ஆராய்ச்சி நடத்தப்பட வேண்டும், அதன் பலன்கள் தொடர்ந்து பெறப்பட வேண்டும் என்று அமைச்சர் கூறினார்.
