
குரங்கு தாக்குதலுக்குள்ளான சிறுவன்
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவில் உள்ள 98ஆம் கட்டை அரபா நகர் பகுதியை சேர்ந்த சிறுவன் குரங்குக்கடிக்கு இலக்காகியுள்ளார்
குறித்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம் பெற்றுள்ளது. இவ்வாறு 12 வயது சிறுவனேகுரங்கு கடிக்கு தாக்குதளுக்குள்ளாகியுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது குறித்த சிறுவன் மாலை நேரத்தில் பள்ளிவாயலுக்கு மதக் கடமையை நிறைவேற்ற தொழுகைக்காக சென்ற வேளையில் குரங்கு தாக்கியுள்ளதாக தெரியவருகிறது. குறித்த சிறுவன் காயங்களுக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
அண்மைக்காலமாக குறித்த குரங்கு தொடர்ச்சியாக மக்களுக்கு தொல்லை கொடுத்து வருவதால் வனஜீவராசிகள் திணைக்களத்தினால் பிடித்து கொண்டு செல்லப்பட வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

