
போலி லேபிளுடன் விற்பனை செய்யப்பட்ட நிறுவனங்களுக்கு அபராதம்!
இணையத்தளங்கள் ஊடாக விற்பனை செய்யப்பட்டு வந்த ஏயார் மிராக்கல் ‘Hair Miracle’ எனும் தலைமுடி பராமரிப்பு தயாரிப்புக்கு எதிராக நுகர்வோர் விவகார அதிகாரசபை சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்தத் தயாரிப்பு தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை அதிகாரசபையின் அனுமதியைப் பெறவில்லை.
ஆனால், அனுமதி பெற்றதாக லேபிளில் போலியாகக் குறிப்பிடப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் தயாரிப்பின் பொதியில் உற்பத்தியாளரின் முகவரி அல்லது தொடர்பு இலக்கங்கள் இடம்பெறவில்லை.
இது தொடர்பான வழக்கில், சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்களுக்கும் மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம் தலா 40,000 ரூபா அபராதம் விதித்துள்ளது.
அத்துடன் லேபிளில் உள்ள போலி வாசகங்களை நீக்கி, திருத்தப்பட்ட அறிக்கையை எதிர்வரும் ஜனவரி 20, 2026 அன்று சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் ஒன்லைன் ஊடாக பொருட்களை வாங்கும் போது லேபிளில் உள்ள தகவல்கள் மற்றும் அனுமதிச் சான்றிதழ்களைச் சரிபார்த்து வாங்குமாறு நுகர்வோர் விவகார அதிகாரசபை பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
