யாழ்ப்பாணம் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தின் முன்னேற்றம் குறித்து இலங்கை கிரிக்கெட் சபை அறிவிப்பு

யாழ்ப்பாணம் மண்டைதீவில் உள்ள யாழ்ப்பாண சர்வதேச கிரிக்கெட் மைதானத்தை கட்டும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும், திட்டமிட்டபடி முன்னேறி வருவதாகவும் இலங்கை கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

டிக்வா சூறாவளி காரணமாக மைதானத்தில் கட்டுமான நடவடிக்கைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டதாக இலங்கை கிரிக்கெட் சபை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில், தற்போது பணிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

திட்டமிட்ட காலப்பகுதிக்குள் மைதானத்தின் கட்டுமானப் பணிகளை நிறைவு செய்வதில் நம்பிக்கையுடன் இருப்பதாக இலங்கை கிரிக்கெட் சபை மேலும் தெரிவித்துள்ளது.