மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் அழகியல் கண்காட்சி

-மூதூர் நிருபர்-

-மூதூர் நிருபர்-

மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் ஏற்பாட்டில் அழகியல் கண்காட்சியானது சேனையூர் மத்திய கல்லூரியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்றது.

இதன்போது மாணவர்களின் நடனங்கள் இடம்பெற்றதோடு ஓவியங்கள், அழகியல் பொருட்கள்ள் என்பவற்றின் கண்காட்சிகளும் இடம்பெற்றன.

மூதூர் வலயக் கல்வி அலுவலகப் பிரிவுகளிலுள்ள பாடசாலை மாணவர்கள் இவ் கண்காட்சியை பார்வையிட வருகை தந்தனர்.

இவ் அழகியல் கண்காட்சியில் மூதூர் வலயக் கல்வி அலுவலகத்தின் பணிப்பாளர் ஏ.எல்.சிராஜ், மூதூர் வலயக் கல்வி அலுவலக பிரதிக் கல்வி பணிப்பாளர்கள் ,உதவி கல்வி பணிப்பாளர்கள் ,ஆசிரியர் ஆலோசகர்கள் , ஆசிரியர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.