
கிளரண்டன் ஐயப்பன் யாத்திரை குழுவின் 3வது வருட மகா மணி பூஜை
கிளரண்டன் கீழ் பிரிவில் அமைந்துள்ள ஐயப்பன் ஆலயத்தில் கிளரண்டன் ஐயப்பன் யாத்திரை குழுவின் 3வது வருட மகா மணி பூஜை நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது.
இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு ஐயப்ப சுவாமியை தரிசனம் செய்தனர்.
விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிக்கப்பட்டு அதனை தொடர்ந்து பஜனை பாடி, படி பூஜை நடைபெற்றது.
அத்துடன் பூஜையில் ஐயப்பன் கோவிலில் பக்தர்கள் திரண்டு வந்து கலந்துகொண்டதுடன் ஏராளமான பக்தர்கள் சுவாமி ஐயப்பன் மணி அணிவித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தொடர்ந்து பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் அன்னதானம் வழங்கப்பட்டு விஷேட அபிஷேகத்துடன் ஐயப்பன் பூஜைகள் இடம்பெற்றது.




