கனடாவில் சட்டவிரோத குடியேற்றவாசிகள் 19 பேர் கைது

கனடாவில் சுமார் 19 சட்டவிரோத குடியேற்றவாசிகளை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கியுபெக் மாகாணத்தின் மொன்டெரெஜி பகுதியில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் .

ஹெய்ட்டியைச் சேர்ந்த நபர்களே கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த குழு, அமெரிக்காவிலிருந்து கனடாவுக்கு சட்டவிரோதமாக கடக்க முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது.கைதாகியவர்கள் அகதி கோரிக்கை முன்வைத்துள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.