
மௌனம் கலைந்து மன்னிப்பு கோரினார் நீ-யோ!
கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தனது இசை நிகழ்ச்சி திடீரென இரத்து செய்யப்பட்டமைக்கு அமெரிக்காவைச் சேர்ந்த பிரபல இசை நட்சத்திரமான நீ-யோ (Ne-Yo) ரசிகர்களிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.
நீ-யோ சமூக ஊடகங்களில் வெளியிட்ட அறிக்கையில்,
இலங்கை ரசிகர்களுடன் இசை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள ஆவலாக இருந்தது.எதிர்பாராத சூழ்நிலைகளினால் இசை நிகழ்ச்சி நடத்த முடியாமல் போனது, இதற்காக தாழ்மையுடன் மன்னிப்பு தெரிவிக்கிறேன், விரைவில் மீண்டும் இலங்கைக்கு வருவேன் என தெரிவித்துள்ளார்
28 ஆம் திகதி கொழும்பில் நடைபெற இருந்த இந்த இசைக்கச்சேரி இறுதி நேரத்தில் இரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பொதுமக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு எதிராக மோசடி குற்றச்சாட்டுகள் பொதுமக்கள் முன்வைத்தனர்.

