ஏஷஸ் டெஸ்ட் தொடர் – இரண்டாம் நாள் ஆட்டம்

ஏஷஸ் டெஸ்ட் தொடரினுடைய நான்காவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதலாம் நாள் ஆட்டம் இன்று  வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மெல்போர்னில் நடைபெறும் குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

இதற்கமைய தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 152 ஓட்டங்களை பெற்றது.

பந்துவீச்சில் இங்கிலாந்து அணியின் சார்பில் ஜோஷ் டங் அதிகபட்சமாக 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி சகல விக்கெட்டுகளையும் இழந்து 110 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் ஹரி ப்ரூக் அதிகபட்சமாக 41 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

இந்தநிலையில் 42 ஓட்டங்கள் முன்னிலையுடன் இரண்டாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிவரும் அவுஸ்திரேலிய அணி இன்றைய ஆட்டநேர முடிவில் விக்கெட் இழப்பின்றி 4 ஓட்டங்களை பெற்றுள்ளது.

போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டம் நாளை சனிக்கிழமை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.