ரிங்கு சிங் அதிரடி சதம்

விஜய் ஹசாரே ஒருநாள் கிரிக்கெட் தொடர் தற்போது இந்தியாவில் நடைபெற்று வருகின்றது.

இதன்படி இன்று இடம்பெற்ற ஆட்டத்தில் உத்தர பிரதேசம் மற்றும் சண்டிகர் ஆகிய அணிகள் மோதின.

இதற்கமைய முதலில் துடுப்பெடுத்தாடிய சண்டிகர் அணி அபாரமாக துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களில் 367 ஓட்டங்களை குவித்தது.

சண்டிகர் அணிக்கெதிராக ரிங்கு சிங் அபாரமாக விளையாடி 60 பந்துகளில் 106 ஓட்டங்களை விளாசியுள்ளார்.

இதில் 10 பவுண்டரிகளும், 4 சிக்சர்களும் அடங்குகின்றது.

இதற்கமைய சண்டிகர் அணிக்கு 368 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சண்டிகர் அணி 29.3 ஓவர்களில் 140 ஓட்டங்களுக்குள் சுருண்டது.

இதனால் உத்தர பிரதேசம் 227 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.