
புறாவுக்கு உணவளித்த நபருக்கு அபராதம்
மும்பை, புனே உள்ளிட்ட பகுதிகளில் இயற்கையாகவே புறாக்கள் அதிகம் வசிக்கின்றன நிலையில், இதனால் பூங்காக்கள், சுற்றுலாத் தலங்களுக்கு அருகே குவியும் நூற்றுக்கணக்கான புறாக்களுக்கு அப்பகுதி மக்கள் உணவு வழங்குகின்றனர்.
மேலும், அப்பகுதியைச் சுற்றி வசிப்போருக்கு நுரையீரலைப் பாதிக்கும், ‘ஹைப்பர்சென்சிட்டிவ் நிமோனியா’ தொற்று அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக மும்பை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கை கடந்த சில மாதங்களுக்கு முன்பு விசாரித்த நீதிபதிகள், மும்பையில் புறாக்களுக்கு உணவளிக்க தடை விதித்து உத்தரவிட்டனர்.
தடையை மீறி புறாக்களுக்கு உணவு கொடுப்பவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கும்படி மும்பை மாநகராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இந்த நிலையில், புறாக்களுக்கு தானியங்களை வழங்கியதற்காக தொழிலதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
உயிருக்கு ஆபத்தான தொற்றுநோயைப் பரப்பும் வகையில் அலட்சியமாக செயல்பட்டதற்காக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், ரூ. 5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
